Friday, July 24, 2009

உடல் எழுத்து - அ முதல் ஆஹா வரை..!!

BODY LANGUAGE...!


அதிகாலை எழு.

ஆகாயம் தொழு.

இருதயம் துடிக்க விடு.

ஈரழுந்த பல் தேய்.

உடல் வேர்வை கழி.

ஊளைச்சதை ஒழி.

எருதுபோல் உழை.

ஏழைபோல் உண்.

ஐம்புலன் பேணு.

ஒழித்துவிடு புகை & மதுவை.

ஓட்டம் போல் நட.

ஒளதடம் பசி.

அஃதாற்றின் எஃகாவாய்.


நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து (கொஞ்சம் தேநீர் நிறைய வானம்).


தமிழுக்கு உயிர் எழுத்து அழகு.
வாழ்க்கைக்கு இந்த உடல்மொழி எழுத்து ஆரோக்கியம்.

-Anwar