
அருகில் அமர்ந்திருப்பவரின் அங்கலாய்ப்பு : -
"மவனே.... நீ இப்படி இருந்தால், நாட்டை மட்டும் அல்ல,
உன் வீட்டை கூட காக்க முடியாது டா."

உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் வேலை பறிபோய் விட்டது.
நாம் படித்த பட்டத்தால் என்ன பயன்? பறக்க விடுவோம் பட்டத்தை பட்டமாக.

ஷூட்டிங் ஸ்பாட். வச்ச குறி தப்பாது.
போட்டோகிராஃபேர் : "ஸ்மைல் ப்லீஸ் ஃபர்ஸ்ட்லி...."
துப்பாக்கி வீரர் : "ப்லீஸ்.... யூ ஸ்மைல் லாஸ்ட்லி..."

பாம்பு என்றால் படை நடுங்கும்.
பெண் என்றால்.....?
படை ஒடுங்கும் / ஒதுங்கும்.!!

தண்ணீர் குடிக்க வந்த, முதலைக்கண்ணீர் வடிக்கும் மாடு :
"கொலைகார பாவிகளா...?!
தாகம் தீர்க்க வந்த என் தேகம் வேணுமா உங்களுக்கு?!"

ட்ரைவர் நாயே....! லைசென்சை தானே காட்ட சொன்னேன்?
அதுக்கு ஏன் என்கிட்ட நாய் மாதிரி வள்வள்னு குரைய்ச்சி உன் மதிப்பை குலைக்கிறா?

உழைப்பாளிகளுக்கு ஓய்வு தேவை தான்.
மவனே.... நீ இங்கே ஓய்வு எடுத்தால், அப்புறம் நிரந்தர ஓய்வு தாண்டி...!?!

துள்ளுவதோ இளமை.
சீனக் காவலர் பயிற்சியில் இது வளமை.
தமிழக காவலர்களுக்கு இது இன்றியமையாமை.
தொப்பைக்கு குட்பை.