சிரிப்பா சிரிக்க போறீங்க... :-):-) (-: (-: :-) "சார், சம்பளத்துல 300 ரூபா குறையுது!"
"போன மாசம் உனக்கு 300 ரூபா கூட கொடுத்தப்ப நீ எதுவுமே சொல்லலியே?"
"
தவறு எப்பவாவது நடக்கலாம், அடிக்கடி நடக்ககூடாதுங்கறத சுட்டிக் காண்பிக்கத்தான் இத உங்க கவனதுக்கு கொண்டு வந்தேன்."
===================
மனைவி : என்னங்க, உங்கள வேலையவிட்டு தூக்கிட்டாங்க போலிருக்கு
கணவன் : நான் ஸ்ட்ரைக்குல கூட கலந்துக்கலயே. எத வச்சு சொல்ற?
மனைவி : உங்க படுக்கை, தலைகாணி, கொசுமருந்து இதையெல்லாம் இப்பத்தான் உங்க
ஆஃபீஸ் பியூன் கொடுத்துட்டு போறான்.
===================
இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணினா நான் எங்க போவேன்னு டாக்டர் அந்த ஆள் கிட்ட சத்தம் போட்டாரே, யார் அவர்? ஏதாவது கந்து வட்டிக்காரரா?
சீ சீ அப்படியெல்லாம் இல்லை. அவன் சுடுகாட்டு வெட்டியான்.
2, 3 நாளா
ஒரு பாடிய கூட காணோமேன்னு டாக்டரை டார்ச்சர் பண்றான்.
===================
இந்த வேலைக்காரி செஞ்ச காரியத்தால வீடே நாறிப் போச்சு.
அப்டி என்னதான் செஞ்சா?
திடீர்னு வேலைய விட்டு நின்னுட்டா.
===================
டாக்டர் எனக்கு வெறும் இன்கமிங்தான், அவுட்கோயிங்கே இல்லை. 10 நாளாகுது டாக்டர்.
ரீசார்ஜ் பண்ணுங்க. அதுக்கு எதுக்கு எங்கிட்ட வந்தீங்க?
அட நீங்க வேற டாக்டர் கிட்டத்தட்ட
10 நாளா மலச்சிக்கல்.
===================
இன்ஸ்பெக்டர்: ஏம்பா அங்க பீச்சுல வெறும் ஜட்டி பிரா மட்டும் போட்டுட்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடறதா புகார் வந்திருக்கே போய் என்னன்னு பாத்தியா?
ஏட்டு : ஜட்டி பிராவெல்லாம் இல்லீங்க
அவங்க சும்மாத்தான் ஆடறாங்க!
===================
மேனேஜர் : நேத்திக்கு உடம்பு சரியில்லன்னு அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுருக்க. ஆனா நீ நேத்து கிரிக்கெட் போட்டில 35 ரன் அடிச்சதா உன் பிரண்ட் சொல்றான்... இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல.
ஊழியர் : சார் எனக்கு நிஜமாகவே உடம்பு சரியில்ல. அதனாலதான் கிரிக்கெட்ல 35 அடிச்சேன். இல்லாட்டி
செஞ்சுரி போட்டிருப்பேனேங்க சார்.
===================
திருமண நிகழ்ச்சி ஒன்றில். . . யாருப்பா அது சாப்பிட்டு முடிச்சிட்டு சாப்பாட்டு இலையை மேல தூக்கி காமிக்கிறது?
அவர் இந்த ஒரு மாசத்தில அவர் கலந்துக்கிட்ட
100வது கல்யாணமாம் இது.
===================
மருமகள் : டாக்டர் என்னோட நாய் வாலை கட் பண்ணிடுங்க.
டாக்டர் : ஏன் திடீர்னு?
மருமகள் : என் மாமியார் நாளைக்கு ஊர்லேந்து வர்றாங்க. வீட்லேந்து
ஒரு துரும்புகூட அவங்களை வரவேற்கக் கூடாதுன்னுதான்.
===================
கோமதி : தான் பிச்சைக்காரனுக்கு 25 ரூபாய் கொடுத்தேன்னு பெருமை அடிச்சுக்கறாளே, அவ புருஷன் ஒண்ணுமே சொல்ல மாட்டானா?
சுமதி : அவ பிச்சைக்காரன்னு சொல்றதே அவளோட புருஷன தான்!கோமதி : ?!?!?
===================
மருந்துக்கடையில் ஒரு பெண்ணுக்கும், மருந்துக் கடைக்காரருக்கும் கடும் வாக்குவாதம். அருகே சென்று என்னவென்று ஒட்டுக் கேட்டதில்......,
மருந்து கடைக்காரர் : இந்தாம்மா, 10 தூக்க மாத்திரை வேணும்னா டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் வேணும், வெறும்
உன்னோட மாமியார் ஃபோட்டோ மட்டும் போதாது.
===================
கணக்கு ஆசிரியர் : உன் வலது பாக்கெட்ல ஒரு ரூபாயும், இடது பாக்கெட்ல ஒரு ரூபாயும் இருந்தா நீ என்ன நினைப்ப?
சிறுவன் : இது வேறு யார் டிராயராக இருக்கும்னு நினைப்பேன்.
===================
வேலைக்காரன் : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே.
முதலாளி : அதுக்கு நீ ஏன் பதர்ற?
வேலைக்காரன் :
இல்லாத விஷயத்துல எப்படி ஸ்கேன் செய்வாங்க ஐயா!
===================
அந்த நாய் போலீஸ் நாய்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?
நாய்க்கே எவ்வளவு
பெரிய தொந்தி இருக்கு பாருங்க!
===================
மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்.
சினேகிதி : அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்?
மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்.
===================
என் மனைவி எதச் சொன்னாலும் மறுத்துப் பேசுவா, நான் சொல்றக மறுத்துப் பேசாமல் இருக்க என்ன செய்யலாம்?
நீங்க அவங்க
தூங்கும்போது பேசுங்க.
===================
நீதிபதி : உன் மேல 3 வழக்கு பதிவாகியிருக்கு, எப்படியும் 4 வருஷம் தண்டனை கிடைக்கும். இதுக்கு நீ என்ன சொல்லப்போற?
குற்றவாளி : ஐயா, இது ஆடிமாசம்,
ஆடித்தள்ளுபடியெல்லாம் கிடையாதா சார்?
===================
வழிபோக்கன் : சார்! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு எப்படிப் போகணும்?
மற்றவன் : அஞ்சு ரூபா கொடு. சொல்றேன்!
===================
சித்தப்பா செத்துட்டாரு... சாவுக்கு எல்லாமே நான்தான் செஞ்சேன்!
சரி.. சித்தப்பா எப்படிச் செத்தாரு?
அதான் சொன்னேனே... எல்லாம்
நான்தான் செஞ்சேன்!
===================
வாத்தியார் : ஏண்டா பள்ளிக்கு இவ்வளவு தாமதமா வர்ற?
பையன் : சார்... நா வேகமாத்தான் வந்துக்கிட்டிருந்தேன்.. நம்ம பள்ளிக்கு வர்ற சாலையில
‘பள்ளிக் கூடம் மெதுவாகச் செல்லவும்’-னு போர்டு போட்டிருந்துச்சு சார்! அதான்...
===================
உங்க ஆபிஸ் கேஷியர் ஏன் கரண்டியால பணத்தை எடுத்து குடுக்கறார்?
அவர் ரொம்ப நேர்மையானவராம். ஆபிஸ் பணத்தை கையால கூட தொட மாட்டாராம்.
===================
எழுத்தாளர் : ஏன் சார் பேப்பர்ல ஒரு பக்கத்தில் மட்டும் எழுதி அனுப்பவும்னு சொன்னீங்க. நானும் அதே மாதிரி 40 கதைகள் அனுப்பியிருந்தேன். ஒண்ணுமே வெளிவரலையே ஏன்?
எடிட்டர் : இன்னொரு சைடை
ரஃப் பேப்பரா உபயோகிச்சுட்டுருக்கோம் சார்.
===================
என் மனைவியை ஒருவன் கடத்திக் கொண்டு போயிட்டான் சார்.
அப்படியா?
அவனை எப்பாடியாவது பழிவாங்கணும்.
முதல்ல உங்க மனைவிய காப்பத்தணும். அதான் முக்கியம்.
இல்ல அவன பழிவாங்கணும்னா
என் மனைவிய மீட்காமலே விட்டுட்றதுதான் ஒரே வழி.
===================
ஆண் : மேடம், இந்த சூப்பர் மார்க்கெட் கூட்டத்தில் என் மனைவி காணாமல் போய் விட்டாள். நீங்கள் என்னுடன் இரண்டு நிமிடம் பேசிக் கொண்டிருக்க முடியுமா?
பெண் : ஏன்?
ஆண் : நான் ஒரு அழகான பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தால் போதும், எங்கிருந்தாலும் வந்து விடுவாள்.
===================
அப்படி என்னடா கேட்ட? உன் லவர் சீ! சீ! அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்னு சொல்றா?
என்னையும், என் அம்மாவையும் அடிப்பாயான்னு கேட்டேன்.
===================
மாமியார் : ரொம்ப அழகுன்னு நினைச்சுட்டு கர்வப் படாதே. உன் வயசுல நான் உன்னை விட அழகா இருந்தேன்.
மருமகள் : ஆனா நான் உங்க வயசுல உங்கள மாதிரி இவ்ளோ அசிங்கமா இருக்க மாட்டேன்.
===================
அங்க என்ன அவ்ளோ கூட்டம்?
ஒரு அரசு அதிகாரியோட வீடு அது.
அந்த அதிகாரி ரொம்ப கடமை உணர்ச்சி மிக்கவர்னு நினைக்கிறேன்.
அலவலகத்துல ரெய்டு அது இதுன்னு வர்றதால வீட்லயே எல்லா வேலையையும் முடிச்சிடுவார்.
===================
பன்றி : மக்கள் நம்மல ரொம்ப கேவலப்படுத்துறாங்கடா மச்சான்.
எலி : ஏன்டா அப்படி சொல்ற?
பன்றி : பின்ன என்னடா? அவங்களுக்கு வர்ற காய்ச்சலுக்கு எல்லாம்,
பன்றிக் காய்ச்சல், எலி ஜூரம், சிக்கன் குனியான்னு நம்ம பெயர வைக்கிறாங்க.
===================
ஏம்பா உருளை என்ன விலை?
கிலோ பத்து ரூபாய்யா.
சொல்லி கொடுப்பா
உருளைக் கிழங்கு கிலோ பத்து ரூபாய். ம்.. சொல்லிட்டேன் பைய பிடிங்க.
===================
டேய் மதிப்பெண் குறைவா வாங்கி இருந்தியே.. உன் அப்பா திட்டலையா?
இல்லடா என்ன ரொம்ப புகழ்ந்தார் டா...
என்னடா சொல்ற புகழ்ந்தாரா?
ம், ஒண்ணு மட்டும் நிச்சயமா தெரியுது, நீ
பரீட்சையில் காப்பியடிக்கலன்னு சொல்லி ரொம்ப பெருமைபட்டார்.
===================
காவலர் : ஏம்மா . . . வீடு தீப்பத்தி எரியும்போது நீங்க மட்டும் தப்பிச்சு வந்துட்டீங்களாமே? உங்க கணவர் புகார் கொடுத்திருக்கார்.
மனைவி : அவர் பாவம்
நல்லா தூங்கிட்டிருந்தார் எழுப்ப மனசு வரலை . . . அதான்!
===================
விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த ஒரு விமானி, தரையிலுள்ள கண்ட்ரோல் ரூம்முக்கு அனுப்பிய செய்தி. “தரைக்கு இன்னும் 600 அடி, தண்ணீர்க்கு இன்னும் 300 அடி, எரிபொருள் தீற போகிறது. என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள?
கண்ட்ரோல் ரூம் பணியாளர் : நான் சொல்லுவதை திரும்ப சொல்லுங்கள், “
ஏ! பரலோகத்திலிருக்கும் பரமபிதாவே! என்னை மன்னித்து ரட்சியுங்கள்".
===================
மாணவர்கள் : முட்டாள்னா யார் சார்?
ஆசிரியர் : தான் சொல்ல வந்த விஷயத்தை மற்றவர்களுக்கு தெளிவாக புரிய வைக்க முடியாதவன் தான் முட்டாள். புரியுதா?
மாணவர்கள் (கோரசாக) :
புரியலையே சார்...===================
என்ன இது ஆபீஸ்னு நெனச்சீங்களா இல்ல உங்க வீடுன்னு நெனச்சீங்களா? கொஞ்சம் கூட ஒரு இது இல்லாம எல்லாம் படுத்தே தூங்க ஆரம்பிச்சுட்டீங்க! அதுவும் குடும்பத்தோட சே. நான்சென்ஸ்...
சார் உங்க ஞாபக மறதிக்கு ஒரு எல்லையே இல்லை? இது உங்க ஆபீஸ் இல்ல,
ட்ரைய்னோட ஸ்லீப்பர் கிளாஸ் கோச்!===================
ஆசிரியர் : எண்கள் தெரியுமா எங்க சொல்லுபாப்போம் 7 க்கு ஆப்பறம் என்ன?
மாணவன்: 8 சார்!
ஆசிரியர்: 9க்கு அப்பறம் என்ன?
மாணவன்: 10 சார்!
ஆசிரியர்: வெரி குட்! உன் பெற்றோர் நல்லா பயிற்சி கொடுத்துருக்காங்க! எங்க இப்ப சொல்லு 10க்கு பிறகு என்ன?
மாணவன்:
ஜாக்கி சார்!===================
முதல் நபர் : ஏன் இப்படி இஷ்டத்துக்கு குடிக்கிறே? ஏதாவது கவலையா?
இரண்டாம் நபர் : என் பொண்டாட்டியை பக்கத்து வீட்டுக்காரன் இழுத்துக்கிட்டு போயிட்டான்.
முதல் நபர் : நீ கவலைப் படறது நியாயம் தான்.
இரண்டாம் நபர் : அதுக்கு கவலைப்படலே. எங்கே
மறுபடியும் கொண்டு வந்து விட்டுடுவானோன்னுதான் பயமா இருக்கு
===================
என்ன சார் இது இன்டர்வியூவுக்கு வந்தா எல்லாருக்கும் கண்ணுல சொட்டு மருந்து ஊத்தறாங்க?
ஹலோ! இது இன்டர்வியூ இல்ல! வரிசையா எல்லாம் உக்காந்திருந்தா அது கம்பெனி இன்டர்வியூன்னு நெனச்சு வந்து உட்கார்ந்துக்கறதா?
இது கண் ஆஸ்பத்திரி!.
===================
என்ன டாக்டர் ஆபரேஷனை முடிச்சுட்டு தையல் போடாம போறீங்க?
அடப்பாவி நீ இன்னுமா உயிரோட இருக்க?! நான்
போஸ்மார்ட்டம்ல செஞ்சேன்.
====================
உன் சமையல நாய் கூட திங்காது!
சத்தமா சொல்லாதீங்க,
உங்க அம்மா உள்ளதான் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க!
:-) :-) ( - : ( - :சிரித்து வாழ வேண்டும்......பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.