Wednesday, October 21, 2009

குடிபோதையில் விமானி...!?


மும்பை:-

விமானி குடிபோதையில் இருந்ததால், மும்பையிலிருந்து நியூயார்க் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் 45 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது.

திங்கள் கிழமை ஏர்டிராபிக் மிகுந்த நள்ளிரவில் இச்சம்பவம் நடந்ததால் விமான நிலையத்தில் பரபபரப்பு ஏற்பட்டது. பல வெளிநாட்டுப் பயணிகளும் இதனால் வெறுத்துப் போய் திட்டத் தொடங்கிவிட்டனர். அனைத்து விமானங்களின் விமானிகளுக்கும் இப்போது குடிபோதை டெஸ்ட் (breathalyzer test) நடத்தப்படுகிறது. விமானம் கிளம்புவதற்கு முன் இந்த சோதனை நடத்தப்படும்.

இந்த சோதனையில், விமானிகள் குடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அவர்கள் தடுக்கப்பட்டு விடுவார்கள். மாற்று விமானிகள் அனுப்பப்படுவார்கள். நேற்று மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு கிளம்பத் தயாராக இருந்த ஏர் இந்தியாவின் போயிங் 777-200. இந்த விமானம் மிகவும் மதிப்பு வாய்ந்த பெருமைக்குரிய விமானமாகக் கருதப்பட்டு வந்தது. காரணம் இதுவரை ஒருநாள் கூட இந்த விமானம் தாமதமாகக் கிளம்பியதே இல்லையாம். மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு எங்கும் நிற்காமல் செல்லும் 'நான் - ஸ்டாப்' விமானம் இது.

11 வெவ்வேறு 'டைம் ஸோன்'களை ஒரே மூச்சில் கடந்து செல்லும் இந்த விமானம், பயணிகளுக்காகக் கூட 5 நிமிடம் தாமதித்ததில்லையாம். இதனால் எப்போதும் இந்த விமானத்தில் இடம் பிடிக்க, இந்திய - வெளிநாட்டுப் பயணிகள் பெரிதும் விரும்புவார்களாம். ஆனால் முதல்முறையாக தனது விமானியால் தாமதத்துக்குள்ளாகியிருக்கிறது இந்த விமானம். இந்த குடிபோதை கமாண்டரின் பெயரை ஏர் இந்தியா வெளியிடவில்லை. 45 நிமிட தாமததுக்குப் பிறகு, அதிகாலை 1.30 மணிக்கு மாற்று விமானி வந்த பிறகு கிளம்பிச் சென்றதாம்.

இந்தியாவில் விமானிகள் குடித்துவிட்டு விமானத்துக்குள் ஏறக் கூடாது என்பது விதி. அதற்காகவே குடிபோதை அறியும் டெஸ்ட் வைக்கிறார்கள். இதில் முதல்முறை மாட்டுபவர்களை எச்சரித்துவிடும் ஏர் இந்தியா , மறுமுறை மாட்டினால் சஸ்பெண்ட் செய்கிறது. ஆனால் கடுமையான தண்டனை என்று எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில் குடிபோதையில் பைலட்டுகள் தூங்கிவிட, மும்பை யில் இறங்க வேண்டிய விமானம் கராச்சி வரை போய் திரும்பியதெல்லாம் நடந்திருக்கிறது.

நன்றி : தட்ஸ்தமிழ்.காம் (21/10/2009)

---------x--------

ஏற்கனவே ஏறு இந்தியா
இப்பொழுது இறங்கு இந்தியா (?!)
ஆகிக்கொண்டிருக்கும் லட்சனத்தில்
இந்த கூத்துக்கள் வேறயா?
என்ன கொடுமை மிஸ்‌டர் சிங்?
:-)