Tuesday, September 29, 2009

கண் தானம் - EYE DONATION

.
"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்".
அந்த சிரசிலும் அதிக முக்கியத்துவம் பெறுவது நம்முடைய கண்கள். கண் நோய் சிகிச்சைக்கென்று பல்வேறு தனிப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. கண் சிகிச்சை என்பது நவீன மருத்துவ உலகில் மிகமிக நுண்ணிய பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கண்ணில் புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால், 10, 15 நாட்கள் மருத்துவமனையில் தங்க நேரிடும். ஆனால் இப்போது ஓரிரு மணி நேரங்களில் லேசர் மற்றும் கணினி தொழில்நுட்ப உதவியுடன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரே நாளிலோ அல்லது சில மணி நேரங்களிலோ வீட்டிற்கு நோயாளி திரும்பி விடுகிறார்கள். அந்த அளவுக்கு கண் சிகிச்சை மருத்துவம் நவீனம் அடைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.


கண் வங்கி என்றால் என்ன?

விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம் அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
.
தானமாக வரும் கண்கள் அனைத்தும் விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இருக்காது, எனவே அவைகள் ஆய்வு மற்றும் கண் கல்விக்கு பயன்படுத்தப்படும்.
.
கண்தானம் ஏன் செய்ய வேண்டும்?
.
விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையற்றோரில் 90 சதவீதத்தினருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. பிறவியிலேயே விழிவெண்படல நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண் பொருத்தப்படுவதன் மூலம் பார்வை கிடைத்துள்ளது.
.
விழி வெண்படலம் என்றால் என்ன?
.
கண்ணீரின் கறுப்பான பகுதிக்கு முன்பு வெளிப்படையாக தெரியும் வெண்படலமே விழி வெண்படலம் என்ற கார்னியா ஆகும். இதுதான் ஒளிக்கதிர்களை குவித்து, கண்ணுக்குள் இருக்கும் ஒளியுணர்வு ஜவ்வுக்கு அனுப்புகிறது. ஆகவே கண் அமைப்பிலேயே மிகவும் முக்கியமான பகுதி இதுவே. கண்ணின் ஒளி ஊடுருவும் தன்மை சேதமடையும்போது பார்வை இழப்பும் ஏற்படுகிறது.
.
விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
.
பழுதடைந்து பார்வை சக்தியை இழந்த விழிவெண்படலத்தை தானமாக வந்த கண்ணின் வெண்படலம் மூலமாக மாற்று அறுவை சிகிச்சை செய்தலே இத்தகு அறுவை சிகிச்சை.
.
விழிவெண்படலம் பழுதடைவது ஏன்?
.
1. நோய்க்கிருமி
2. காயங்கள்
3. மருத்துவர்களால் ஏற்படுவது
4. ஊட்டச்சத்து குறைவு
5. பிறவி / மரபணு.
.
யார் கண்தானம் செய்ய முடியும்?
.
1 வயது முதல் கண்தானம் செய்யலாம். இதற்கு வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. மந்தமான கண் பார்வையோ, வயதோ வித்யாசத்தை ஏற்படுத்தாது. தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்ணை தானம் செய்வது புனிதமான செயல். ஆனால் நண்பர்களோ, உறவினர்களோ உங்களது இந்த புனித ஆசையை நிறைவேற்ற வேண்டும். கண்ணாடி போட்டுக் கொள்பவர்கள், காடராக்ட் செய்து கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உடையவர்கள் என்று அனைவரும் கண் தானம் செய்யலாம். ஆனால் மாற்றுக் கண் பொருத்தும் அறுவை சிகிச்சை, தானம் செய்யப்பட்ட கண்களை தீவிரமாக பரிசோதித்த பிறகே பயன்படுத்தப்படும்.

.

--------- x ---------
.
கண் தானம் செய்வோம்...
மனித நேயத்தை காப்போம்...
மரணித்த பின்பும் மனிதர்களின் அகத்திலும் & புறத்திலும் வாழ்வோம்.
g
.
"தாயின் கருவறையில் நான் இருந்தவரை வெளிச்சத்தை கண்டதில்லை... பிறந்த பிறகும் பூமித்தாயின் கருவறையில் தான் நான் வாழ்கிறேன்" - கண்ணில்லா குழந்தையின் கண்ணீர்.

a

கண்ணிருந்தும் குருடர்......
கண் தானம் செய்யாதோர்.
&
உயிர் இருந்தும் சடலம்...
ரத்த தானம் செய்யாதோர்.
&
அறிவு இருந்தும் மூடர்...
அழகிய இந்தப் பதிவை பற்றி
அடுத்தவர்க்கு சொல்லாதோர். :-)
.
g
.
Google search on EYE DONATION
.
&
.
Google search on BLOOD DONATION
.
.
Read my previous article
.