Wednesday, August 19, 2009

Relax Your Mind From Work Tension.! Then Mind Your Work to Relax From Personal Tension..!!

கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...!
-------------------
ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை மாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா.
-----------------
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது.
---------------------
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா...
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
---------------------
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
----------------------
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்
---------------------
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
--------------------
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க
?டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
---------------------
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா.
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
----------------------
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!
---------------------
சார், டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே?
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?!
-------------------
''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''''
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''
--------------------
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
------------------
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்???
--------------------
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...
-------------------------- X -------------------------
BE SMILE ALWAYS.
A CURVE (SMILE) MAKES EVERYTHING AS STRIGHT.
SMILE IS A CHEAP & BEST MAKE-UP FOR FACE.
:-)