Monday, October 18, 2010
அன்னையர் தினம்!
வரி ஏதுமில்லை வர்ணிக்க உனை;
நீ உண்ணாவிட்டாலும்
நான் உண்பதற்கு ஒடிவருவாய்
உணவோடு உன் அன்பையும் பிசைந்து!
அழுது வடியும் எனை வாகனத்தில்
ஏற்றிடுவாய் பள்ளிக்குச் செல்ல;
அனுப்பிவிட்டு அழுதுக்கொண்டிருப்பாய்
சிறுபிள்ளையாய் நீ!
தோளுக்கு மேல் வளர்ந்தாலும்
எண்ணையைக் கொண்டு என்னை
இழுப்பாய் வறண்டுப்போன என் சிகைக்காக;
ஈரமான உன் பாசத்தைக்கொண்டு!
என் மண நாளில் மனம்விட்டு அழுதாய்;
மகிழ்ச்சியில் மழலையாய்;
குலுங்கி அழும் உனக்கு நான் இன்னும் குழந்தையாக!
தினமும் கொண்டாட வேண்டிய உனை
தினம் வைத்துக் கொண்டாடுவதா;
இறுகிப்போன இதயத்திற்குதான்
வருடத்திற்கு முறை அன்னையர் தினம்!
புரிந்துக்கொண்டேன் உனை
நான் எனப் பொய்யாகச் சொன்னாலும்;
திணறித்தான் போவேன் புரியாத உன் பாசத்திற்கு!
Created & Composed by : யாசர் அரஃபாத்
Subscribe to:
Posts (Atom)