வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கியாச்சு. இனி கொசுக்களின் காலம். எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள் ரீங்காரமிட்டு, நம்முடைய ரத்தத்தை உறிஞ்சும். அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள்,
கிரீம் மற்றும் `மேட்’களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்! கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தெடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால், அவருக்கு ரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு, அது முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கெள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பல ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.
கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு. மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது. சரி… இதற்கு வேறு என்னதான் வழி? ஒரே வழிதான்…
அது --------> கொசுவலையை மட்டும் பயன்படுத்துவது தான்...!!
Thanks to : www.tamilcnn.com