Showing posts with label ரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம். Show all posts
Showing posts with label ரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம். Show all posts

Monday, August 09, 2010

ரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம்


                               (click on the image to view larger size)

அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!

ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!

இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!

ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!

எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!

ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!

ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!

ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!

ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்!
 
 
நன்றி :  கலீல் அஹ்மத் பாகவீ  அவர்கள்
                 (பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா)


=========

மாதம் என்பதை மதம் என வாசித்தாலும் இங்கு இஸ்லாத்தின் மகிமையை உணரலாம்.