1 மணி நேர லெக்சருக்கு ரூ.82,000
10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு சி.இ.ஓ.
கோலாலம்பூர், மலேசியாவை சேர்ந்த 10 வயது பொடியன், 2 கம்பெனிகளுக்கு தலைமை செயல் அதிகாரியாக கலக்குகிறான்.
.
படிப்பை பாதியில் விட்ட அவனுக்கு, கல்லூரிகளில் 1 மணி நேரம் விரிவுரையாற்ற ரூ.82,000 தரப்படுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ். இவரது மகன் ஆதி புத்ர அப்துல் கனி. வயது 10. செரியானா 2 நிறுவனங்களைத் தொடங்கி ஆதி என்ற பெயரில் விட்டமின் மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார்.
.
அப்துல் கனி, 3ம் வகுப்பு வரை படித்தான். ஆனால், தனது பாடத் திட்டத்துக்கு மீறி, இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் அடுக்கடுக்கான அறிவை வெளிப்படுத்தினான். இன்டர்நெட்டில் புகுந்து எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தான்.
.
.
அறிவுத் தேடலுக்கு இடையே, அன்னையின் பிசினசையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினான். இப்போது 2 நிறுவனங்களின் செயல்பாட்டையும் ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் அப்துல் கனி. அதனால், அந்த கம்பெனிகளின் தலைமைச் செயல் அதிகாரி என அவனை அழைக்கின்றனர்.வயதுக்கு மீறிய அறிவாளித்தனம் காரணமாக, மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய அப்துல் கனி, பாடப் புத்தகங்களைப் படிப்பதை விட இன்டர்நெட்டில் அதிகம் அறிய முடிகிறது என்கிறான்.
.
இதற்கிடையே, பல பாடப் பிரிவுகளில் அவனுக்கு உள்ள அபார ஞானத்தை அறிந்த மலேசிய கல்லூரிகள், அவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன.அம்மாவின் கம்பெனி நிர்வாகத்தைக் கவனிப்பதுடன், கல்லூரிகளில் விரிவுரை ஆற்றுவது, இன்டர்நெட்டில் மூழ்குவது என இருக்கிறான் அப்துல் கனி. ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.82,300 ஊதியம் பெறுகிறான்.
.
இஸ்லாமிய ஆய்வுக் கல்வியில் விரிவுரையாளராக விரும்புவதாக கூறும் சிறுவனை, கனடா, சிங்கப்பூர், அமெரிக்காவில் படிக்க வைக்க அவனது தாய் திட்டமிட்டுள்ளார்.
==============
ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்...
தன் 10௦ வயது மகனை CEO எனக் கேட்ட தாய்....!!
:-)