ஓசோன் படலம் வாயு மண்டலத்தின் உயரமான அடுக்குகளில் காணப்படுகிறது. இது சூரியனின் கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. அதே போல தரைப்பகுதியிலும் ஓசோன் உள்ளது. இது தாவரங்கள் விலங்குகளை பாதிக்கிறது. இதுபற்றி விக்டோரியா விட்டிக் என்ற விஞ்ஞானி ஆராய்ச்சி செய்தார். அவர் கூறியதாவது :-பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி, எரிபொருட்களை பயன்படுத்துவதனால் ஓசோனின் அளவு அதிகரிக்கிறது. வாயு மண்டலத்தில் ஆக்சிஜன் உள்ளதைப் போல ஓசோன் வாயுவும் உண்டு. தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்த அளவைவிட தற்பொழுது ஓசோன் 4-மடங்கு அதிகரித்து விட்டது.அதனால் மரங்களின் வளர்ச்சி கி.பி.1800களில் இருந் ததை விட தற்போது 7-சதவிதம் குறைந்துள்ளது. இது 2100-வாக்கில் இன்னும் 10-சதவிதம் அதிகரித்து 17-சதவீதம் ஆகிவிடும். இது மரங்களில் கார்பன் தன்மயமாவதை தடுத்து மரங்களின் வளர்ச்சி மற்றும் அதன் பொருண்மையை குறைக்கும். இது ஊசி இலை மரங்களைவிட படர்ந்த இலையுடைய மரங்களை எளிதில் தாக்குகிறது. மரங்களின் வேர்ப்பகுதியை பாதிப்பதன் மூலம் புயலால் எளிதில் சேதப்படுத்தப்படுகிறது.
மரங்களை வளர்ப்போம் : மண்ணைக் காப்போம்.
ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இம்முறையை பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின் போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த அறுவை சிகிச்சை முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.
மனிதனாக இருப்போம் : மனிதநேயத்தை வளர்ப்போம்.
செல்போன்களை பயன் படுத்துவதால் புற்று நோய், நரம்ப தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை. அவை நிரூ பிக்கப்படவில்லை என்று மாறுபட்ட தகவல்களும் வெளியாயின. இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க டாக்டர்கள் இணைந்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் மொபைல் போன்களில் இருந்து வெளி யாகும் கதிர்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த கதிர் வீச்சு நமது தூக்கத்தை பாதிக்கும். இதனால் தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மூளையின் செல்களை இந்த கதிர்வீச்சு தூண்டி விடுவதால் மூளை விழிப்பு டன் செயல்படும். இதனால் ஆழ்ந்த தூக்கம் வராது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 35 ஆண்கள் மற்றும் 36 பெண்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டுள்ளது. இவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஆடம்பரம் அத்தியாவசியம் ஆனாலும் அதனினும் அவசியம் ஆரோக்கியம்.