Wednesday, April 28, 2010

அவன் தூயவன்


அந்தரத்திலே உலகம்..!
ஆளில்லா வானவெளி...!

எங்கிருந்து வந்தோம்....?!
எங்கு செல்வோம்....?!
நம் கண்களுக்கு தெரியவில்லை.....!!

இங்கு காற்றில் மிதக்க வைத்தான்....!
தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்....!
கருவறை நோக்கிய பயணத்தில்.....!

கோடி போட்டியாளரில்
நம்மை முடிசூட வைத்தான்....!

அட்டை பூச்சி போல நாம்
ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க
கருவறை படைத்தான்...!

நம்மை இரத்த கட்டியாக்கினான்....!
பின் சதைக்கட்டியாகினான்.....!
பின் எலும்பு கொண்டு போற்றினான்...!

நம் தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து வேறுபட்ட போது,
செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்....!

மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான.....!

நம் தாயின் பாலை நமக்கு
இனிப்புடன் உற்பத்தி செய்தான்....!

அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்....!
கோடையில் குளிர்சாதன பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்....!

இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்....!

உனக்கு வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை என்கிறாயே..!

நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே இருக்கிறான்.

மனிதனே.......!
அந்த ஒருவனை மறந்துவிடாதே.....!

அவன் ஒருவன்....!
அவன் தனித்தவன்.......!

சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன..!!

விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!

விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்...!

உலகை அடக்கி ஆள்பவன்....!

அவன் மகா தூயவன்.....!!


எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே......!!!

நன்றி:  தஃபாரக் குழுமம்

Sunday, April 11, 2010

APPLE A DAY... CANCELS CANCER AWAY :-)

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் புற்றுநோயிலிருந்து 35 சதவீதம் வரை பாதுகாப்பு பெறுகிறார்கள். தினசரி ஒன்றுக்கு மேல் ஆப்பிள் பழம் சாப்பிடுகிறர்களுக்கு 50 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. ஆப்பிள் பழத்தின் தசைப் பற்றான பாகத்தைவிட அதன் தோல் 5 மடங்கு புற்றுநோய் எதிர்ப்பு திறன் பெற்றுள்ளது என போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

போலந்து விஞ்ஞானிகளின் ஆய்வினையும் அதன் கண்டுபிடிப்புகளையும் விளக்கும் கட்டுரை “கான்சர் பிரிவென்சன்" இதழில் பிரசுரம் ஆகி உள்ளது. அந்த ஆய்வுக்கட்டுரை விவரம் வருமாறு:

ஆப்பிள் பழம் உடல் நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்ற கருத்து உலகமெங்கும் பரவி உள்ளது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறவர் தன் வீட்டுக்கு மருத்துவர் வரவிடாமல் தடுத்துவிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் 592 பேரைப் பேட்டி கண்டு போலந்து விஞ்ஞானிகள் பேசினர்.

அந்த புற்று நோயாளிகளின் உணவுப் பழக்கங்கள் குறித்தும் விசாரித்து அறிந்தனர். மருத்துவ மனையில் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறும் புற்று நோய¢ பாதிக்காத 765 நோயாளிகளையும் அவர்கள் கண்டு பேசினார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்தில் 9.5 முறை ஆப்பிள் பழத்துண்டுகள் சாப்பிட்டதாகக் கூறினார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்படாதவர்கள் ஒரு வார காலத்தில் 11 முறை ஆப்பிள் துண்டுகள் சாப்பிட்டுள்ளனர். தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் 35 சதவீத பாதுகாப்பை பெறுகிறார்கள். ஒரே நாளில் ஒரு பழத்துக்கு மேல் ஆப்பிள் சாப்பிட்டவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் பாதுகாப்பை பெறுகிறார்கள். இத்தகைய பாதுகாப்பை மனிதர்களுக்கு வழங்குவது ஆப்பிள் பழத்தில் உள்ள ஃபிளாவினாய்ட்ஸ் என்ற சத்துப் பொருள்தான்.

இந்த சத்துப் பொருள் ஆப்பிள் தோலிலும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பகுதியைவிட தோலில் 5 மடங்கு அதிகம் ஃபிளாவினாய்ட்ஸ் உள்ளன. எனவே ஆப்பிள் பழத்தை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். தோலை சீவி எறிந்துவிட்டால் ஆப்பிள் பழம் தரும் கான்சர் பாதுகாப்பு உரிய அளவில் கிடைக்காது என ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.


A for APPLE  & 
A for AAROKYAM
A for AMAITHI
A for AANANTHAM  :-)  A for Adirai's Amazing Anwar :-)