அமெரிக்காவில் வெளிவரும் குளோபல் பினான்ஸ் என்கிற பத்திரிகை உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் பட்டியலை இன்று (செப்டம்பர் 20, 2010) வெளியிட்டது. ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யை (GDP - Gross Domestic Product) (Definition : The total market value of all final goods and services produced in a country in a given year i.e. Country's Overall Economic Output) & GDI (Gross Domestic Income ) பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகத்தின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வாகி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமான வருமானம் இயற்கை எரிவாய்வு மூலம் கத்தார் நாட்டிற்க்கு கிடைத்துள்ளது. அந்த நாடு ஒவ்வரு வருடமும் 77 மில்லியன் டன் இயற்கை எரிவாய்வை உற்பத்தி செய்கிறது.
கத்தார் நாட்டின் ஜி.டி.பி மதிப்பு 90,149 டாலர்கள்.
பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு கத்தார் தாண்டி உள்ளது. 79,411 டாலர்கள் மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அடுத்த மூன்றாவது இடத்தை நார்வேயும் (ஜி.டி.பி மதிப்பு 52,964 டாலர்கள்), நான்காம் இடத்தை சிங்கப்பூரும் (ஜி.டி.பி மதிப்பு 52,840 டாலர்கள்), ஐந்தாவது இடத்தை ப்ரூனேவும் (ஜி.டி.பி மதிப்பு 48,714 டாலர்கள்)பெற்றுள்ளது. ஆறில் இருந்து பத்தாவது இடங்களை அமேரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்த், நெதர்லாந்த் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெற்றுள்ளது. அரபு நாட்டை பொறுத்த வரையில் கத்தார் அருகில் எதுவுமே இல்லை. கத்தாரை அடுத்து குவைத் அரபு நாடு பட்டியலில் இருக்கிறது. குவைத் பதினான்காவது இடத்தில இருந்தும் அதன் ஜி.டி.பி மதிப்பு 38.984 டாலர்கள் என்பது கத்தார் மதிப்பிற்கு பாதி கூட இல்லை. 36,167 டாலர்கள் ஜி.டி.பி மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18வது இடத்தை பெற்றுள்ளது.

முதல் பத்து இடத்தை பிடித்த நாடுகளும் அதன் ஜி.டி.பி மதிப்புகளும்:
1 கத்தார் 90,149 டாலர்கள்
2 லக்செம்பெர்க் 79,411 டாலர்கள்
3 நார்வே 52,964 டாலர்கள்
4 சிங்கப்பூர் 52,840 டாலர்கள்
5 ப்ரூனே 48,714 டாலர்கள்
6 அமெரிககா 47,702 டாலர்கள்
7 ஹாங்காங் 44,840 டாலர்கள்
8 சுவிட்சர்லாந்து 43,903 டாலர்கள்
9 ஹாலந்து 40,601 டாலர்கள்
10 ஆஸ்த்ரேலியா 39,841 டாலர்கள்
Thanks to TMB Group
=========
இந்த பட்டியலில் இந்தியா 128 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு 3,176 டாலர்கள்). எந்தப் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது என்று கணித்து சொல்லுங்கள் பார்ப்போம்...?!!
ஊழல்?
எய்ட்ஸ்?
வறுமை?
மததுவேஷம்?
அரசியல் அநாகரிகம்?