











இன்று எத்தனை பேர் கூகுளாரின் லோகோவை கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. அமேரிக்காவில் வாழும் தம்மாத்துண்டு குழந்தைகளிலிருந்து 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் வரை கடந்த இரண்டு மாதங்களாக அனைவருக்கும் ரவுண்டு கட்டி நேஷனல் டிசைன் மியுசியத்துடன் இணைந்து ஒரு அற்புதமான போட்டி நடத்தி முடித்துள்ளது. அதாவது "நான் விரும்பும் உலகம்" (WHAT I WISH FOR THE WORLD) என்ற தலைப்பில் எல்லா குழந்தைகளும் அவரவர் விருப்பம் போல கூகுள் லோகோவை வடிவமைக்க வேண்டியது. தேர்ந்தெடுக்கப்படும் லோகோ ஒரு நாள் முழுதும் கூகுள்.காமை அலங்கரிக்கும். எத்தனை சிறப்பான விஷயம்? கூகுளின் லோகோவையும் அவர்கள் அடிக்கடி அதன் முகம், நிறம் மாற்றும் உக்திக்கே பலர் அடிமை. இதில் இப்படி ஒரு போட்டியை எல்லா குழந்தைகளுக்கும், பள்ளிகளுக்கும் வைத்து இத்தனை பொறுப்புடன் திறமைகளை வெளிக்கொணரும் பாங்கை என்ன சொல்வதென்று புரியவில்லை.
இந்தப் போட்டியில் வெல்லுபவருக்கான பரிசுகளைப் பாருங்கள்.
1. முதல் பரிசு பெறும் குழந்தைக்கு $15,000 படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் பரிசு
2. கூகுள் அலுவலகத்திற்குள் ஒரு பயணம்.
3. ஒரு லேப்டாப்.
4. வென்ற லோகோவைக் கொண்ட ஒரு டீஸர்ட்.
5. இதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையின் பள்ளிக்கு கம்ப்யுட்டர் லேப் வளர்ச்சிக்காக $25,000 பரிசு.
தானும் ஜெயிக்கணும்.... மற்றவர்களையும் பாராட்டணும். இது தான் கூகுலின் வெற்றிச் சூத்திரம்.
மிச்சத்தை உங்கள் திரையில் காண்க (இங்கே சொடுக்குக).
இந்த இணைப்பில் வலது புறம் உள்ள வீடியோ தொகுப்பை காணுங்கள்.
No comments:
Post a Comment
COMMENTS PLEASE....!