Thursday, August 20, 2009

Pictures & Philosophical Comments of Me : தத்துவப் பித்துக்கள்.

படமும் & பாடமும்

சிறுநீர் கழிக்கையில் கூட சீட்டாட்டம் சிந்தனையில் இருப்பின், சீர்கெடும் வாழ்வு.

பெரும் அலையென வரும் பெரும் பிரச்னையை கூட,
எதிர்நீச்சல் போட்டு வெல்லும் துணிச்சல் வேண்டும்.

ஆமைக்கு ஓடு சுமை அல்ல. நத்தைக்கு கூடு, ஒரு கூடுதல் பலம்.
நமக்கு வாழ்வு ஒரு வரம். வாழ்வை வளமாக்கு & வரமாக்கு.


நாம் தட்டிக்கழிக்கும் ஒன்று மற்றோருக்கு தரமாகப் படலாம்.



உற்சாகமாக & உண்மையாக உழை. உலகம் உன்னை உயர்த்தும்.


இயற்கையை சுவாசி. இறைவனை நேசி.
இயன்றவரை பசித்தபின் புசி.

பரீட்சையில் பக்கத்திலிறுப்பொரை பார்த்து எழுத,
பிட் பண்ண பழகாதே.
தேர்வில் வெற்றி மட்டும்முக்கியம் அல்ல.
எவ்வாறு வென்றாய் என்பதே அவசியம்.
மதிப்பு-எண் மட்டும் முக்கியம் அல்ல.
உனக்குள் உன்னைப் பற்றிய நல்ல மதிப்பும் & எண்ணமும் அவசியம்.


ஏழையையும் & எளியோரையும் எள்ளளவும் எள்ளிநகையாதே.
குறைவின்றி கொடுப்போருக்கு குறையாது செல்வம்.


ஜாதிகள் பலவாகலாம். நிறங்கள் நிறைய இருக்கலாம்.
நன்றி செய்யும் (மனித)நேயத்தால் நாம் ஓர் இனம்.

பகைவனைக்கூட பகைக்காதே. எதிரியும் எளிதில் நண்பன் ஆகலாம்.


மற்றவரைக் காட்டிலும் நான் தான் பெரிய மனசுக்காரன்
என்று மார்த்தட்டிக் கொள்ளாதே.
பார்ப்போருக்கு புரிந்துவிடும் நீ எப்படிப்பட்டவன் என்று.


தோள் கொடுத்த தோழனை தோல்வியில் தள்ளாதே.
ஏறி வந்த ஏணியை எப்போதும் எட்டி உதைக்காதே.

No comments:

Post a Comment

COMMENTS PLEASE....!