Monday, October 05, 2009

தெரியாது - முடியாது - கிடையாது



  • உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
  • குயிலுக்குக் தனக்கென கூடு கட்டவோ, தன் முட்டையை அடைகாக்கவோ தெரியாது.
  • செந்நாய் எனப்படும் விலங்குக்கு குரைக்கத் தெரியாது.
  • ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.
  • மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது.
  • பிளாட்டினம் எனும் உலோகத்தை எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாது.
  • எமு எனும் பறவையால் பின்புறமாக நடக்க முடியாது.
  • வாத்தின் "க்வாக்" சத்தத்துக்கு மட்டும் எதிரொலி கிடையாது.
  • பெல்ஜியம் நாட்டில் சினிமாவுக்குத் தணிக்கை கிடையாது.
  • கடல் சிலந்தி, ஸ்குவிட்களுக்கும் காது கிடையாது.
  • சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனி தேசிய மொழி கிடையாது.
  • இசை மேதை பீத்தோவனுக்குப் படிப்பறிவு கிடையாது.
  • வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் பறக்கும் தசைகள் கிடையாது.
  • நீளமான கடல் பிராணி ஆக்டோபஸ்க்கு முதுகெலும்பு கிடையாது.
  • இங்கிலாந்து அரசியின் காருக்கு எண்கள் எதுவும் கிடையாது.
  • பறவைகளுக்கு மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.
  • ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.
  • ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து கிடையாது.
  • நீங்கள் எனது இந்த இணையத்தை தினமும் படிக்கிறீங்களா இல்லையா என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. படிக்காவிடில் என்னால் எதுவும் செய்ய முடியாது. இதில் இல்லாத தகவல் ஒன்றும் கிடையாது. இது போல் வேறு எங்கும் கிடைக்காது. ஹா ஹா. :-)

No comments:

Post a Comment

COMMENTS PLEASE....!