விரட்டியடித்த மைக்ரோசாஃப்ட் - திருப்பியடித்த நெட்ஸ்கேப்
மைக்ரோசாஃப்ட் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத அதிர்ச்சி 2004 ஆம் ஆண்டு வாக்கில் ஃபயர் ஃபாக்ஸ் மூலம் கொடுக்கப்பட்டது. பேரரசர்கள் சிற்றரசர்களைச் சிறைப்பிடித்து கப்பம் கட்ட வைத்தது போல் தனக்கு முன்பே சிறிதும் பெரிதுமாக செயல்பட்டு வரும் நிறுவனங்களை காசு கொடுத்து வாங்கி காலடியில் போட்டு வைப்பது அல்லது காலை ஒடித்து முடக்கிப் போட்டு சந்தையிலிருந்தே விரட்டியடிப்பது என்ற முரட்டு முதலாளியாகக் களமிறங்கியது மைக்ரோசாஃப்ட்.
தொடர்புடைய பிற செய்திகள்:

.
தனக்கு முன் செயல்பட்டு வந்த நெட்ஸ்கேப் குழுமத்தின் நேவிகேட்டர் என்ற உலாவியை, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இணைய உலாவியை தனது விண்டோஸ் இயங்குதளத்துடன் இலவச இணைப்பாக வழங்கி ஆப்படித்தது. ஓசியில் ஏசி கிடைக்கும்போது யார்தான் காசு கொடுத்து விசிறி வாங்குவர்? சொல்லாமல் கொள்ளாமல் அனேக நெட்ஸ்கேப் பயனர்களை வலையில் வீழ்த்தியது மைக்ரோசாஃப்ட்.
.
மைக்ரோசாஃப்டுடன் கெஞ்சியும் பயனில்லை; மிஞ்சவும் முடியவில்லை என்றான பிறகு, போகும்போது ஏன் சும்மா போகனும். இரு, வைக்கிறேன் ஆப்பு என்று சற்றே பிரபலமாகத் தொடங்கிய ஓபன் சோர்ஸ் என்ற இணையப் பொது உடமைக் கொள்கைக்கு மாறி, ஏழைக்கேற்ற ப்ரவ்சராக நுழைந்து மைக்ரோசாஃப்டுக்கு அதிர்ச்சி கொடுத்தது.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பஞ்ச தந்திரங்களையும் கையாண்டு மைக்ரோசாஃப்ட்டால் பாதிக்கப் பட்டவர்களையும் மரணடி வாங்கி வீதிக்கு வந்தவர்களையும் ஓரணியில் திரட்டி, 25% சதவீத இணைய உலாவி சந்தையை ஃபயர்ஃபாக்ஸ் பெற்றுள்ளது.
.
மைக்ரோசாஃப்டின் கண்ணில் விரல் விட்ட கூகிலும், பர்சனல் கம்யூட்டரின் பிதாமகன் ஆப்பிலும்கூட மைக்ரோசாஃப்டுக்கு ஆப்படிக்க மைக்ரோசாஃப்டின் தீராத தலைவலியாகிவிட்ட ஃபயர் ஃபாக்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளன.மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸை கடந்த ஐந்தாண்டுகளில் 330 மில்லியன் பயனாளர்கள் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக தரவிறக்கம் செய்துள்ளனர்.
.கடந்த ஐந்தாண்டுகளில் அதிவிரைவாக முன்னேறும் இணையத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் வேகமான உலாவியாக இருந்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளோம் என்கிறார் மோஸில்லா ஃபவுண்டேசனின் க்ரிஸ் ப்ளிஸார்ட்.
.
95% இணையப் பயனர்களைக் கொண்டிருந்த மைக்ரோஸாஃப்டை மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளி, விரைவான செயல்பாடு, தொடர்ந்த ஒத்துழைப்பு, மேம்பட்ட சேவைகள், தளையறு உலாவி தடையின்றி கிடைக்க வேண்டும் என்று இயங்கி வரும் ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவிக்கு இன்றோடு ஐந்து வயது பூர்த்தியாகிறது. ஆறாவது பிறந்த நாளுக்குள் கைப்பேசிகளுக்குமான ப்ரவ்சர் சந்தையையும் கலக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
.
மைக்ரோசாஃப்டின் வயிற்றையும் சேர்த்துக் கலக்குவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.
=========
நமக்குத் தெரிஞ்சதெல்லாம் மேட்ச்பாக்ஸ் தானுங்கோ..... :-)
===========
=========
நமக்குத் தெரிஞ்சதெல்லாம் மேட்ச்பாக்ஸ் தானுங்கோ..... :-)
===========
தொடர்புடைய பிற செய்திகள்:
No comments:
Post a Comment
COMMENTS PLEASE....!