Tuesday, September 13, 2011

CELLO TAPE : Tips to Begin Business :-)


பரிசுப் பொருட்களை அழகாக பேக்கிங் செய்யணுமாகடித உறைகளை ஒட்டணுமாபடங்களை சுவரில் ஒட்டணுமாஇல்லைகுழந்தைகளின் கிழிந்துபோன நோட்டுப் புத்தகத்தை ஒட்டணுமாஎல்லாவற்றுக்கும் நாம் தேடும் ஒரே ஒரு பொருள் செல்லோ டேப்!   அதுமட்டுமல்லடெக்ஸ்டைல்ஸ்தோல்பொருட்கள்ஹார்டுவேர் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்த செல்லோ டேப் மிக முக்கியமான பொருளாகப் பயன்படுகிறதுஅவ்வளவு தேவை மிகுந்த பொருளான செல்லோ டேப்  தயாரிப்பது குறித்து....


சந்தை வாய்ப்பு!
ஸ்டேஷனரி கடைகள்ஃபேன்ஸி ஸ்டோர்கள் என சில்லறைகடைகளிலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் இந்தசெல்லோ டேப்புகளை விற்பனை செய்ய முடியும்செல்லோடேப் பிஸினஸ் ஒவ்வொரு ஆண்டும் 15% வளர்ச்சி காண்கிறது.தொழிற்துறை வளர்ச்சி காரணமாக இத்தொழிலுக்கு உருவாகிஇருக்கும் சந்தை வாய்ப்பும் அதிகம்எனவேபுதிதாகஇத்தொழிலில் இறங்குகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பாகஅமையும்.

முதலீடு!
குறைந்தபட்சம் 8 லட்சம் ரூபாய் முதல்கோடிக் கணக்கில் இதில்முதலீடு செய்யலாம்ஆண்டுக்கு 2.70 லட்சம் மீட்டர் செல்லோடேப் தயாரிக்க சுமார் 18 லட்சம் முதலீடு தேவை.

மூலப் பொருள்!
ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம்அடிசிவ்இந்த இரண்டும்தான்முக்கிய மூலப் பொருட்கள்போட்டோ ஃபிலிம் போல இருக்கிறதுஇந்த ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம்அப்படியே ரோல் ரோலாகக்கிடைக்கிறதுஇந்த மூலப் பொருள் போபால் மற்றும்சென்னையிலும் கிடைக்கிறதுமேலும்அடிசிவ் என்பது பசை.முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் இதை அப்படியேவிலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

கட்டடம்!
இயந்திரங்களைப் பொறுத்து வதற்குதயார் செய்த செல்லோடேப்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கு என 1,500 முதல் 4,000சதுரடி வரை இடம் தேவைப்படும்சொந்தமாகவோ,வாடகைக்கோ எடுத்து இந்த பிஸினஸைத் தொடங்கலாம்.

இயந்திரம்!
கோட்டிங் இயந்திரம்ஸ்லைட்டிங் (Slitting) மற்றும் ஸ்லைசிங்(sliving) இயந்திரம்இந்த மூன்றும்தான் முக்கிய இயந்திரங்கள்.இவை இருந்தாலே செல்லோ டேப் தயாரிப்பு யூனிட்டைதொடங்கிவிடலாம்மேலும்கூடுதலாக கலர் பிரின்டிங்இயந்திரம் செல்லோ டேப்பில் எழுத்துக்கள் அச்சிடபயன்படுகிறதுகோட்டிங்ஸ்லைட்டிங் மற்றும் ஸ்லைசிங்இயந்திரம் இவை மூன்றும் எட்டு லட்ச ரூபாய்க்குள் வாங்கிவிடமுடியும்அதற்கு அதிகமான விலையிலும் இயந்திரங்கள்கிடைக்கின்றனஇயந்திரங்கள் அனைத்தும் சென்னை மற்றும்புதுச்சேரியில் கிடைக்கிறது.

தயாரிப்பு முறை!
மூலப் பொருட்களான அடிசிவ் எனப்படும் பசையை டேப் கிரேடுஃபிலிம் ரோலில் கோட்டிங் இயந்திரத்தின் மூலம் கோட்டிங்செய்ய வேண்டும்இந்த பசை ஈரப்பதத்துடன் இருப்பதால்அதனை பாய்லரில் 140 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில்சூடுபடுத்தினால்செல்லோ டேப்பாக வந்துவிடுகிறதுகாட்டன்,நைலான்பிளாஸ்டிக் என பல வகையிலும் இந்த செல்லோடேப்பைத் தயாரிக்கலாம்செல்லோ டேப் தயாரான பிறகுஇதனை ஸ்லைசிங் இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள்கேட்கும் அளவுகளில் 5, 12, 15 மில்லி மீட்டர் என்கிற அளவுகளில்'கட்’ செய்து கொடுத்துவிடலாம்.

மேலும்செல்லோ டேப்பில் ஏதேனும் வாசகம் பிரின்ட் செய்யவேண்டும் எனில் கலர் பிரின்டிங் இயந்திரத்தின் மூலம் பிரின்ட்செய்து கொள்ள முடியும். 12,000 மீட்டர் டேப் கிரேடு ஃபிலிம்மில்20,000 மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கலாம்.

வேலையாட்கள்!
திறமையான வேலை யாட்கள்-3, சாதாரண வேலையாட்கள்-5,மேனேஜர்-1, சூப்பர்வைஸர்-1, விற்பனை யாளர்- 2, மற்றவர்கள்-2என மொத்தம் 14 நபர்கள் தேவைப்படுவார்கள்.

பிளஸ்!
பேக்கிங் செய்வது அனைத்து விதமான தொழில் களுக்கும்இன்றியமையாத விஷயம்எனவேஇதற்கான தேவைஎப்போதும் இருந்து கொண்டே இருக்கும்தவிரஅதிகஅளவிலான தயாரிப்பாளர்கள் கிடையாது என்பது கூடுதல் பலன்.

மைனஸ்!
மூலப் பொருட்களின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன்இருக்கும்தவிரவாங்கும்போது ஒரு விலைவாங்கிய பிறகுவேறொரு விலை என அதிகரிக்கவும் வாய்ப்புண்டுஇதற்குதகுந்தாற்போல் விலையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

பலருக்கும் தெரியவராத தொழில் இதுபோட்டிகள் அதிகம் இல்லாத தொழில் என்பது கூடுதல் சிறப்புஆரம்பத்திலேயே இத்தொழிலில் இறங்கினால்நிச்சயம் ஜெயிக்கலாம். 

ALL THE BEST...!!

For more info...... Click & Read...
http://en.wikipedia.org/wiki/Masking_tape

No comments:

Post a Comment

COMMENTS PLEASE....!